ஊரடங்கு நேரத்தில் 22 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80 வயது முதியவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்திலும் 22 வயது இளம் பெண் ஒருவரை 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனது ஆண் நண்பர் ஒருவரிடம் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவரது தூரத்து உறவினரான 80 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வயதானவர் என்பதால் எந்தவித சந்தேகமும் இன்றி ஆண் நண்பருடன் அவருடைய வீட்டுக்கு இளம்பெண் சென்ற நிலையில் இருவருக்கும் அந்த 80 வயது முதியவர் மது கொடுத்ததாக தெரிகிறது. இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் மதுவை குடித்து விட்டு போதையில் இருந்தபோது, இளம்பெண்ணை 80 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் ஆண் நண்பரின் விலை உயர்ந்த வாட்சையும் திருடிவிட்டு அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
மது போதை தெளிந்து எழுந்தபோது, அந்த பெண் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது ஆண் நண்பரும் தனது விலை உயர்ந்த வாட்ச் திருடுபோனதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள 80 வயது முதியவரை தேடி வருகின்றனர். மதுபோதையில் இருந்த இளம் பெண்ணை 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com