மோடியின் மேக்கப்புக்கு 80 லட்சமா? வெளியான உண்மை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடி, அவரை அழகுபடுத்திக்கொள்ள, மேக்கப்புக்கு மட்டும் 80 லட்சம் செலவு செய்து வருவதாக, தகவல் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
இந்நிலையில் இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தகவலை ஒருவர் 'தகவல் அறியும் சட்டத்தின் கீழ்' பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு மேடம் தசவுட்ஸ் குழுவினர், மோடியின் மெழுகு சிலை வைப்பதற்காக அவருடைய எடை, தலைமுடியின் நிறம், உள்ளிட்டவற்றை எடுக்கும்போது எடுத்த வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது மோடியின் மெழுகு சிலை, லண்டனில் உள்ள மேடம் தசவுட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரதமர் செய்கிற தனிப்பட்ட செலவுகள் அரசின் நிதியில் இருந்து எடுக்கப்படுவது இல்லை என்கிற கூடுதல் தகவலையும் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com
Comments