கேரள முதல்வரிடம் நிவாரண நிதியளித்த 80களின் நாயகிகள்

  • IndiaGlitz, [Friday,August 31 2018]

கோலிவுட் திரையுலகில் கடந்த 80களில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் கூடி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக உள்ளனர். அந்த வகையில் இந்த குரூப் தற்போது கேரள முதல்வரை சந்தித்து தங்களுடைய நிவாரண நிதியை அளித்துள்ளது.

நடிகைகள் குஷ்பு, சுஹாசினி மற்றும் லிசி ஆகியோர் கேரள முதல்வரை சந்தித்து தாங்கள் வசூல் செய்த ரூ.40 லட்சத்தை இன்று வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இதுகுறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நாங்கள் அனைவரும் தனித்தனியே கேரள வெள்ள நிவாரண நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கியபோதிலும் எங்களுடைய 80களின் குரூப்பில் இருந்து வசூல் செய்த தொகையை தற்போது முதல்வரிடம் அளித்துள்ளோம். கேரள மக்களுக்கு இந்த சமயத்தில் நாம் எல்லோரும் உதவ வேண்டியது மிகவும் அவசியம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை லிசி மற்றும் சுஹாசினி கூறியபோது, 'நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் என தனித்தனியே நிவாரண நிதி கொடுத்திருந்தாலும், எங்களுடைய 80களின் குரூப் மற்றும் எங்கள் நண்பர்களிடம் சேகரித்த தொகையை இன்று முதல்வரிடம் வழங்கியுள்ளோம்' என தெரிவித்தனர்

More News

18 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் நஸ்ருதின் ஷா

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹே ராம்' திரைப்படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் மிக அபாரமாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதின்ஷா என்பது தெரிந்ததே

கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால்தான் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை.

இந்திய சூப்பர் ஸ்டார் படத்திற்கு வாழ்த்து கூறிய நம்மூர் சூப்பர் ஸ்டார்

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

அமிதாப் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிராய்ச்சியுடன் சேர்ந்தாரா மகத்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத் மற்றும் யாஷிகா இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இந்த காதலை இருவருமே ஒப்புக்கொண்டனர்.