மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்ற வீராங்கனையாக மாறிய 8 வயது சிறுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளையை வீரத்துடன் எதிர்கொண்டு அடக்கும் காளையர்களைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் 8 வயது சிறுமி ஒருவர் தனது உடன்பிறந்த தம்பியை காப்பாற்ற மாட்டுடன் மோதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹோனவார் என்ற பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த மாடு ஒன்று மிரண்டு ஓடி வந்து இருவரையும் முட்ட முயற்சித்தது. உடனே பயந்து ஓடாமல் தனது தம்பியை கையில் தூக்கி கொண்ட அந்த சிறுமி, மாட்டிடம் இருந்து தன்னையும் தனது தம்பியையும் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த ஒருவர் ஓடி வந்து மாட்டை கட்டையால் அடித்து விரட்டினார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தம்பியின் உயிரை காப்பாற்ற மாட்டுடன் வீரத்துடன் போராடிய அந்த சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout