8 வயது சிறுமியை 8 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஆசிபா என்ற 8 வயது சிறுமியை கடத்தி இந்து கோவில் ஒன்றில் அடைத்து வைத்து 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்த விவகாரம் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர் என்பது கொடுமையிலும் கொடுமை
இந்த நிலையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அம்மாநில மக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து அரசு அதிகாரி, காவல் அதிகாரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அந்த எட்டு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாஜகவினர்களுக்கு எதிராகவும், சிறுமிக்கு நீதி கேட்டும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டுவிட்டரில் #JusticeforAsifa என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தள பயனாளிகள் பாஜகவினர்களுக்கு கடும் கண்டங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதோடு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் விகே சிங் கூறியபோது, 'ஆசிபா விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments