புதுவீட்டில் குடிபெயர்ந்த 20 நாட்களில் 3 பேர் மரணம்: லண்டன் இந்திய குடும்பத்தின் சோகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
லண்டனில் வாழும் இந்திய குடும்பத்தினர் புதிய வீட்டில் குடிபெயர்ந்த 20 நாட்களில் அந்த வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்து 3 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூஜெர்ஸியில் இந்திய குடும்பம் ஒன்று சமீபத்தில் புதிய வீடு ஒன்றில் குடியேறியது. இந்த குடும்பத்தில் உள்ள 8 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் நிஷா பட்டேல் மற்றும் நிஷாவின் மாமனார் பரத் பட்டேல் ஆகிய மூவரும் தவறுதலாக நீச்சல் குளத்தில் அடுத்தடுத்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின்படி போலீசார் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது மூன்று பேரும் நீச்சல் குளத்தில் பிணமாக இருந்தனர் என்றும், அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த துரதிஷ்டவசமான மரணங்கள் உண்மையில் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குடும்பத்தினர் வேறு வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து 20 நாட்கள் மட்டுமே ஆகிறது என்றும் குடிபெயர்ந்த 20 நாட்களில் இந்த சோகம் நடந்துள்ளதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதே வீட்டில் இன்னொரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு இந்த மூவரின் மரணம் குறித்து தாமதமாகவே தெரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments