60 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய 8 வயது சிறுமி… மிரட்டும் வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,May 30 2023]
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கை வாசகத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் 8 வயது சிறுமி ஒருவர். கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற கனவோடு செயல்பட்டுவரும் அவர் தற்போது 8 வயதில் 60 கிலோ எடையை டெட்லிஃப்ட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஸியா கோஸ்வாமி. பளு தூக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து தனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களையும் ஃபாலோயர்களையும் பெற்று தற்போது இளம் வீராங்கனையாக உருவாகி இருக்கும் அர்ஸியாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நொடிப் பொழுதில் டெட்லிஃப்ட் செய்வதில் கெட்டிக்காரரான அர்ஸியா தொடர்ந்தது பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். அந்த வகையில் அர்ஸியா தனது 6 வயதில் (கடந்த 2021 டிசம்பரில்) 45 கிலோ எடையை தூக்கி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார். தொடர்ந்து 2022 இல் 35.8 கிலோ எடையைச் சுமந்து இளம் தடகள வீராங்கனை என்ற பிரிவில் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார்.
இப்படி பளு தூக்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அர்ஸியா தற்போது 8 வயதில் 60 கிலோ எடையை மிக எளிதாக டெட்லிஃப்ட் செய்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் அர்ஸியா எதிர்காலத்தில் சிறந்த வீராங்கனையாக உருவெடுப்பார் என்ற நம்பிக்கை பலரது மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் அர்ஸியா குறித்துப் பேசும் அவருடைய தந்தை அவளுக்கு கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பதுதான் ஆசை. கின்னஸ் பதக்கம் வென்ற மிராபாய் சானுவை தன்னுடைய நம்பிக்கை நட்சத்திரமாக வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் டெட்லிஃப்ட் செய்வதைத் தவிர டேக்வாண்டா, பவர் லிஃப்டிக் செய்வதிலும் அர்ஸியாவிற்கு ஆர்வம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.