'8 தோட்டாக்கள்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் என்ற இயக்குனரின் முதல் படமான '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னம் அவர்களின் 'காற்று வெளியிடை' படத்துடன் வெளியானபோதிலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் சென்னையில் 10 திரையரங்க வளாகங்களில் 37 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,14,840 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்திற்கு கிடைத்த நல்ல அறிகுறி ஆகும்.

மாஸ் நடிகர்கள், பெரிய பட்ஜெட், பிரமாண்ட இயக்குனர், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆகியோர் இல்லாமல் அறிமுக நடிகர்கள், அறிமுக இயக்குனர் ஆகியோர்களின் '8 தோட்டாக்கள்' படம் அதன் திரைக்கதையாலே வெற்றி பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

More News

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து. தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நியாயமாக தேர்தல் நடத்தும் சூழல் வந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

இளையதளபதி விஜய் தற்போது 'தளபதி 61' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது...

இதுவரை நடிக்காத முக்கிய வேடத்தில் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு கிடைத்த பட்டத்திற்கு ஏற்ப நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டோரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

'காற்று வெளியிடை' கலெக்சன் குறித்த விபரங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை...

விவேக் வீட்டிற்கே சென்று பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்

முன்னாள் இந்திய ஜனாதிபதியும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமான அப்துல் கலாம் அவர்களின் பெயரின் 'பசுமை கலாம்' என்ற திட்டத்தின் பெயரில் நடிகர் விவேக் கடந்த சில வருடங்களாக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்...