தலைமை செயலகத்திலும் புகுந்த கொரோனா: 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே வருவதால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் மட்டும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத அலுவலர்களுடன் இயங்கி வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக சென்னை தலைமைச் செயலகம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வந்தது. தலைமைச் செயலகத்தில் மொத்தம் 6 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 3000 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 8 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்றப் பணியாளர்கள் பெரும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் 50 சதவீதத்துக்கும் பதிலாக 33% பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வரும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments