ஒரே நாளில் 8 காட்சிகளா? புலியின் அடுத்த சாதனை

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று ரிலீஸ் தேதியுடன் முன்னணி பத்திரிகையில் விளம்பரமும் வெளிவந்துள்ளது.

இளையதளபதியின் படங்கள் அனைத்தும் தமிழகத்தை போலவே கேரளாவிலும் மாபெரும் வரவேற்பை பெறும் என்பது அனைவரும் அறிவோம். இந்நிலையில் வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய இருநாட்களிலும் கேரளாவில் உள்ள ஒருசில தியேட்டர்களில் 'புலி' படத்தை 8 காட்சிகள் திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாலை 12, 3.15, 6.00, காலை 9.15, பிற்பகல் 12.15, 3.30, மாலை 6.00 மற்றும் இரவு 9.30 என எட்டு காட்சிகள் திரையிட ஒருசில கேரள தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த திரைப்படமும் ஒரு நாளில் எட்டு காட்சிகள் திரையிடப்பட்டதாக வரலாறு இல்லை. ஐந்து அல்லது ஆறு காட்சிகள் மட்டுமே அதிகபட்சம் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் சென்னை உள்பட ஒருசில மாநகரங்களில் 'புலி படத்தின் அதிகாலை காட்சி திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி, கமல் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கமலுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.....

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாவாரா தல-தளபதி நாயகி?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப திரையுலகில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்......

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா விடலை விருந்து

சிறந்த இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எந்த ஒரு துறையிலும் முதல் முயற்சியைப் போலவே இரண்டாவது முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் சென்னை இளைஞராக நடித்திருக்கும் இந்தப் படம் அதற்கான த

'49 ஓ' திரைவிமர்சனம் கவுண்டமணியின் கர்ஜனைக்கு ஒரு 'ஓ'

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நகைச்சுவை அரசர் கவுண்டமணி, ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார். அதுவும் கதாநாயகனாக...இத்தனை ஆண்டுகள் ஓய்வில் இருந்த கவுண்டமணி, ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததில் இருந்தே, இந்த படத்தில் ஏதோ புதுமையாக இருக்கின்றது என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை கவுண்டமணியும், அறி

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்தது

நாய்கள் ஜாக்கிரதை' வெற்றி படத்தை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த 'ஜாக்சன் துரை' படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த