உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு என்ற பகுதியில் ரவுடிகள் காவல் துறையினர் மீது நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலால் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே குற்றவழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி ஷகாஷ் துபா பிக்ரு பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடிகள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே டிஎஸ்பி தேவேந்திர மிஷ்ரா உட்பட 8 போலீஸார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு உத்திரப்பிரேசத்தில் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது பாஜக அமைச்சரவையில் இடம்பெற்ற சந்தோஷ் சுக்லா என்பவரை ரவுடிகள் சுட்டுக் கொன்றனவர். அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஷகாஷ் துபா பதுங்கியருப்பதாக வந்த செய்தியை அடுத்து தற்போது காவல் துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். அந்த சமயத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இச்சம்பவத்தில் ரவுடிகள் ஏ.கே. 47 ரக தானியங்கி துப்பாகிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் ஏ.கே. 47 ரக துப்பாகிகளின் குண்டுகள் கைப்பற்றப் பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரவுடிகளை நோக்கி காவல் துறையினரும் எதிர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தானியங்கி துப்பாக்கிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தக் கோர சம்பவம் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

More News

இன்று முதல் போரை தொடங்குகிறது மக்கள் நீதி மய்யம்: கமல் அறிவிப்பு

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது பல டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார்

லடாக்கில் திடீர் விசிட்: கெத்து காட்டிய பிரதமர் மோடி

இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கொரோனா வைரஸை தடுக்க முகக்கவசம் போல இதுவும் ரொம்ப முக்கியம்!!! FDA வின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படி பரவும்? பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

அதிபர் ட்ரம்புக்கு டஃப் கொடுக்கும் ஜோ பிடன்!!! அமெரிக்க அரசியலில் தொடரும் பரபரப்பு!!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மியான்மரில் வேலை செய்துகொண்டிருந்த 100 தொழிலாளர்கள் பலி!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் என்ற பகுதியில் மாணிக்கக் கற்களை தோண்டி எடுக்கும் ஒரு பிரபலமான சுரங்கம் செயல்பட்டு வருகிறது.