மணிரத்னம், சிம்பு, தனுஷ் படங்கள்.. செப்டம்பரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் 8 படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்’ சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ தனுஷ் நடித்த ’நானே வருவேன்’ உள்பட 8 படங்கள் ரிலீசாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டமர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2. வெந்து தணிந்தது காடு: சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
3. நானே வருவேன்: தனுஷ் மற்றும் செல்வராகவன் நீண்ட இடைவேளைக்குப்பின் இணைந்துள்ள ’நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. கலைபுலி எஸ் தாணு அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் தனுஷ் ’நானே வருவேன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. கேப்டன்: ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்த ‘டெடி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’கேப்டன்’. ஹாலிவுட் பாணியில் அமைந்துள்ள இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
5. சினம்: அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அருண் விஜய்யின் அடுத்த படமான ‘சினம்’ செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
6. கணம்: ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷர்வானந்த், அமலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கணம்’. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7. கோல்டு: நயன்தாரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவான ‘கோல்டு’ திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. பிரம்மாஸ்திரா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மெளனிராய், நாகார்ஜூனா, டிம்பிள் கபாடியா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடித்துள்ளனர். இந்த படம் ரூ.410 கோடியில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com