8 மாதக் கர்ப்பத்துடன் நீருக்கு அடியில் போட்டோ ஷுட் நடத்திய பிரபல நடிகை?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்’‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதற்குப் பின்பு தல அஜித்துடன் “அசல்”, அடுத்து “நடுநிசி நாய்கள்”, “வெடி“, “வேட்டை“ போன்ற படங்களில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஹன்ஸ், நைரா எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களைப் பற்றிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் தொடர்ந்து சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இதனால் ஏராளமான ரசிகர்களும் இவருக்கு உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது நீருக்கு அடியில் போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். அதோடு அந்தப் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு உருக்கமான காரணத்தையும் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில் நடிகை சமீரா ரெட்டி, எனக்கு முதல் குழந்தை ஹன்ஸ் பிறந்த பிறகு நான் 105 கிலோ எடையுடன் இருந்தேன். இதனால் குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை. அதோடு எனக்கு Alopecia areata எனும் நோய் இருப்பதும் தெரியவந்தது. இதனால் கொத்துக் கொத்தாக என்னுடைய தலைமுடி கொட்டத் துவங்கியது. இதையடுத்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அடிக்கடி அழத் தொடங்கினேன்.
இதுகுறித்து என் மாமியார் அழகான குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறாய். கணவர் நன்றாக கவனித்துக் கொள்கிறார். எதற்கு அழுகிறாய் எனப் பலமுறை என்னிடம் கேட்டு இருக்கிறார். இந்நிலையில் நான் ஒரு ஹோமியோபதி மருத்துவரைச் சந்தித்தேன். அதற்குப் பின்தான் என்னுடைய உடல் எடையைக் குறைக்க முடிந்தது.
அதற்கு பிறகு குழந்தை வளர்ப்பு குறித்தும், தாய்மை குறித்தும் தொடர்ந்து பல ஆலோசனைகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறேன். ஆனால் இதுபோன்ற ஆலோசனைகளைக் கூட பலர் தவறாகப் புரிந்து கொண்டனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத நான் மீண்டும் தைரியமாகத் தாய்மை அடைந்து நைராவை பெற்றெடுத்தேன். அதோடு குழந்தை வளர்ப்பு குறித்து மற்றவர்களுக்கு இன்ஸ்டாவில் ஆலோசனை வழங்கி வருகிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது குழந்தைக்கும் சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments