இந்தியா, இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

இந்தியாவில் புல்வாமாவிலும், இலங்கையில் வழிபாட்டு தலங்களிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் தாதா தர்பார் மசூதி அருகே இன்று மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகிய இந்த மசூதி அருகே குண்டு வெடித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.

இந்த மசூதியின் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவிகள் 8 பேர் பலியானதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருசிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது

More News

ஆசை வார்த்தை பேசி அம்மா-மகளை மயக்கிய மசாஜ் சென்டர் வாலிபர்!

சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ'

ரஜினி கட்சியில் கருணாநிதி மகன்? மெகா திட்டம் தயார்!

22  சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.

 ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம்: விஜய், சூர்யா ரசிகருக்கு நடிகையின் பதிலடி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றை முதல் பிளே ஆஃப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியின் சி.எஸ்.கே படை தோல்வி அடைந்தது.

விஜய் ஆண்டனியின் உதவிக்கு நன்றி கூறிய ராய்லட்சுமி!

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராய்லட்சுமி நடித்த 'நீயா 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது சிண்ட்ரெல்லா மற்றும் ஸ்ரீகாந்துடன் ஒரு படம்