பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரம் சுஜாவும் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருக்கும் நிலையில் இவர்களில் 8 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வார இறுதியில் எலிமினேஷன் செய்யப்படுவார்.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 8 பேர்களின் பெயர்கள் பின்வருமாறு: பாலாஜி முருகதாஸ், நிரூப், ஜூலி, ஷாரிக், அபினய், அனிதா, தாமரை மற்றும் சினேகன்.

இந்த நிலையில் அபிராமி, தாடி பாலாஜி, ஸ்ருதி , வனிதா,ஆகிய நான்கு பேர்கள் மட்டும் நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பதால் அவர்கள் அடுத்த வாரமும் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாமினேஷன் செய்யப்பட்ட 8 போட்டியாளர்களில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கணித்து கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.