close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

Sunday, January 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் '7ஜி ரெயின்போ காலனி. யுவன்ஷங்கர் ராஜா இசையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவான இந்த படம் 15 வருடங்கள் கழித்து தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'மலால்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல மராத்தி இயக்குனர் மங்கேஷ் ஹடவாலா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகன், நாயகி கேரக்டர்களில் மீஜான் ஜாஃப்ரே மற்றும் ஷர்மின் ஷேகல் ஆகியோர் நடிக்கவுள்ளனர். சஞ்சய் லீலா பஞ்சாலி தயாரிக்கவுள்ள இந்த படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment