தமிழகத்தில் இன்றும் 700க்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 776 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,967ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 776 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8795ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 400 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,282 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்புகிறவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், ரயில், விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வருவோரில் பலருக்கு கொரோனா என்பது புதிய சவால் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

More News

நான் இறந்தபிறகு என் உடலையாவது சொந்த ஊருக்கு எடுத்து செல்லுங்கள்: துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞர்

நான் இறந்த பிறகாவது என்னுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று துபாயில் தவித்து வரும் தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மியா மால்கோவாவுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்தேன்: ராம்கோபால் வர்மா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது

மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது போலீசில் புகார் அளித்த கணவர்

தான் செல்லாத இடங்களையெல்லாம் கூகுள் மேப் காண்பிப்பதாகவும், அதனால் தனது மனைவி சந்தேகப்படுவதாகவும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம்

இந்திய இராணுவம் அறிவித்துள்ள புதிய இன்டெர்ன்ஷிப் "டூர் ஆஃப் டியூட்டி" பற்றி தெரியுமா???

இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த நாட்டுக் குடிமக்கள் கட்டாயம் ராணுவத்தில்

சில மாநிலங்கள் கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டத் திருத்தம்!!! தொழிலாளர்களே எதிர்ப்பது ஏன்???

கொரோனா ஊரடங்கினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.