தமிழகத்தில் 771, சென்னையில் 324: இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்காதது ஆகியவை காரணமாக மிக அதிக பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 771 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4829 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 324 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம் 2328 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து அரியலூரில் இன்று மட்டும் 188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூரில் 95 பேர்கள், காஞ்சிபுரத்தில் 45 பேர்கள், திருவள்ளூரில் 34 பேர்கள், மதுரையில் 20 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 2 பேர்கள் பலியாகியுள்ளதால் கொரோனாவுக்கு மொத்தம் 35 பேர்கள் பலியாகியுள்ளனர். அதேபோல் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 பேர்கள் என்பதும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1516 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று 13281 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும், மொத்தம் 178,472 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

1,2,3,4,...5: செளந்தர்யா ரஜினியின் அசத்தல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் இயக்குனருமான செளந்தர்யா சமீபத்தில் நடிகர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

கொரோனா பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி சுட்டுக்கொலை!!! நீடிக்கும் மர்மம்!!!

பென்சிலேவேனியாவில் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வை மேற்கொண்டு வந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த வார இறுதியில் சுட்டக் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடை திறப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்து உள்ளதை

சலூன் கடை திறக்க அனுமதி இல்லை: விரக்தியில் தூக்கில் தொங்கிய சலூன் கடைக்காரர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நடிகை மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார்: பெரும் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற பிரபல நடிகை ஒருவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது