செப்டம்பரில்தான் ரிஓபன்… ஒரே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 770 பேருக்கு கொரோனா!!!

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு செப்டம்பர் மாத நடுவில் இங்கிலாந்தின் பல பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அங்குள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் தற்போது கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் ஒரே பல்கலைக் கழகத்தைச் சார்ந்த 770 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறித்து கடும் பதற்றம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் நியுகோலஸ் நகரில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலைக் கழத்தில் தற்போது வரை 770 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் அவர்களுடைய கதவுகளில் Covid+, send beer என எழுதி வைத்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக் கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு, மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது.

இதைத்தவிர அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இதுவரை 124 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் 221 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன என்றும் வெறுமனே சில நாட்களில் அதிக பேருக்கு பாதிப்பை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் நியூகோல்ஸ் நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் 250 பேருக்கு தொற்று இருப்பதாகவும் அம்மாகாண சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலையை தொடங்கிவிட்டதா எனப் பலரும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.