ஒரு நல்ல ஆத்மா மறைந்துவிட்டது: 77 வயது நடிகர் மறைவுக்கு அனுஷ்கா இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு நல்ல ஆத்மா மறைந்து விட்டது என 77 வயது நடிகர் ஒருவரின் மறைவிற்கு நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ’வேதம்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘வானம்’ என்ற படத்தில் சிம்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்த இரண்டு படங்களிலுமே அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்
இந்த நிலையில் ‘வேதம்’ படத்தில் நாகையா என்பவர் ராமுலு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், அதன்பின்னர் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘வேதம் நாகையா’ என்றே அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘வேதம்’ அனுஷ்காவுடன் இவர் நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகையா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து கேள்விப்பட்ட தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில் அனுஷ்காவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஒரு நல்ல இதயம் கொண்ட மனிதர் நம்மை விட்டுச் சென்று விட்டார், அவர் கண்டிப்பாக சொர்க்கத்துக்கு தான் சென்று இருப்பார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்து இருந்தார். இந்த மேலும் நாகையா உடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் கிரிஷ் அவர்கள் தற்செயலாக தெருவில் சென்று கொண்டிருந்த போது நாகையாவை கண்டு பிடித்ததாகவும் அவரை உடனடியாக தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஒரு வசனத்தை படிக்க சொன்னதாகவும், உடனே அவரை தனது ’வேதம்’ படத்தில் நடிக்க வைத்ததாகவும் பேட்டி ஒன்றில் நாகையா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments