சுய காதல் அவசியம்… 77 வயதில் வித்தியாசமாகத் திருமணம் செய்துகொண்ட பெண்மணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலுக்கு கண்ணில்லை என்றுதான் சொல்வார்கள் ஆனால் இங்கு ஜோடி கூட தேவையில்லை என்று முடிவுசெய்த பெண்மணி ஒருவர் 77 வயதில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
திருமணத்தில் பாலின விஷயங்கள் எல்லாம் அவசியமில்லை என்ற முடிவிற்கு இன்றைய உலகம் நகர்ந்துவிட்டது. ஆனால் திருமணத்திற்கு மற்றொரு துணையே தேவையில்லை என்ற முடிவையெடுத்த சிலர் கொரோனா காலக்கட்டத்தில் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட விசித்திர நிகழ்வுகளையெல்லாம் பார்க்க முடிந்தது. காரணம் காதலில் தோல்விகளைச் சந்தித்து அலுத்துப்போய் இதுபோன்ற முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் திருமண உறவால் கசப்பான மனநிலைக்குத் தள்ளப்பட்ட வயதான மூதாட்டி ஒருவர் தனது 77 வயதில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோவை அடுத்த கோஷனில் வசித்துவரும் டோரதி டாட்டி ஃபிடெலி என்பவர் கடந்த 1965 இல் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் 9 வருடங்கள் மட்டுமே நிலைத்த அந்த உறவின் மூலம் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து, பின்பு பேரக் குழந்தைகளையும் வளர்த்தெடுத்து தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இப்படி திருமண வாழ்க்கையில் ஒரு பிடிப்பையே அனுபவிக்காத ஃபிடெலி வாழ்நாளின் பெரும்பகுதியை மற்றவர்களுக்காகவே கழித்துவிட்டதை உணர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏன் தன் மீது அன்பு செலுத்தக்கூடாது என்று சிந்தித்த அவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டதாகவும், இனிமேல் தன்னைப் பற்றி சிந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments