தடுப்பூசி போட 69 வயது மனைவியை தூக்கி சென்ற 76 வயது முதியவர்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வசதிகள் உள்ள நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசியை போட்டு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த 76 வயது நபர் ஒருவர் தனது 69வது வயது மனைவியை தடுப்பூசி செலுத்துவதற்காக அழைத்துச் சென்றார். மனைவியால் நடக்க முடியாது என்பதால் அவர் தனது கைகளாலேயே மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தன்னுடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காகவும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இந்த தள்ளாத வயதிலும் மனைவியை தூக்கிச் சென்றது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற வயதானவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வரும்போது அவர்களுக்கு வீல்சேர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவமனையின் கடமையாகும்.