கேரளாவுக்கு வந்த 750 டன் செல்லாத ரூபாய் நோட்டுக்கள்! ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,November 09 2017]
பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெற்ற இந்த செல்லாத நோட்டுக்கள் என்ன ஆகின என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகள் பல டன்கள் இருந்ததால் அவற்றை எரித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதை கணக்கில் கொண்டு இந்த நோட்டுக்களை வேறு வகையில் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது
இதன்படி கேரளாவில் உள்ள வெஸ்டர்ன் இண்டியா ப்ளைவுட் என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 750 டன் ரூபாய் நோட்டுக்களை சிதைத்து அந்நிறுவனத்திற்கு அனுப்பியது. இந்த வெஸ்டர்ன் இண்டியா ப்ளைவுட் நிறுவனம், சிதைந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை மரக்கூழுடன் இணைத்து ஹார்டுபோர்ட் அட்டைகளை உருவாக்கியுள்ளது. இந்த அட்டைகளுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உள்ளதாம். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு பேனர்கள் கட்ட இந்த ஹார்டுபோர்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது