தமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா: இந்தியாவில் 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு

டெல்லியில் மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிவர்களுக்கு மட்டும் இதுவரை 264 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் பலரின் பரிசோதனை முடிவு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மொத்தம் 1103 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது ஏற்கனவே அறிந்ததே.
 

More News

அமேசான் காட்டையும் விட்டு வைக்காத கொரோனா: பழங்குடியின பெண்ணையும் தாக்கியதால் பரபரப்பு 

உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி, இதுவரை உலகம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்ததே.

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன

சென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை

தமிழ் சினிமாவின் காமெடி நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருமான நடிகை ஆர்த்தி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு 

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்