சென்னை உள்பட நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு: மத்திய சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31ஆம் தேதி வரை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 75 மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளையும் இந்த 75 மாவட்டங்களிலும் முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட 75 மாவட்டங்களில் தமிழகத்தை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தவிர விஜயவாடா, விசாகப்பட்டனம், சண்டிகார், டெல்லியில் உள்ள 7 மாவட்டங்கள், ராஜ்கோட், காந்திநகர், பெங்களூரு, மைசூர், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம் போன்ற நகரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Favorite Tweetsby @igtamilFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments