சென்னையில் இன்றும் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 743 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8228 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 987 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 5882 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் இன்று 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தில் மொத்தம் 343,793 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 


 

More News

மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்கும் 'மாஸ்டர்' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அவளுக்கான உலகத்தை நான் அமைத்துக் கொடுப்பேன்: பிரபல நடிகர் உறுதி

நடிகர் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்குச் சென்ற இரட்டைச் சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவற்றில் பல படங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது

உலக நாடுகளின் கொரோனா நிவாரண நிதி, ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு தெரியுமா???

கொரோனா தாக்கத்தை எதிர்க்கொள்ள உலக நாடுகள் ஹெலிகாப்டர் மணியை அள்ளி வீசியிருக்கின்றன