கள்ளக்குறிச்சியில் நேற்று வரை 15 பேர், இன்று ஒரே நாளில் 74 பேர்: கோயம்பேடு காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 15 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு அடைந்து இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இம்மாவட்டத்தில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றவர்களால் இன்று ஒரே நாளில் 74 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலையில் கள்ளக்குறிச்சியில் கடைகள் அனைத்தும் திறந்திருந்த நிலையில் சற்றுமுன் அனைத்து கடைகளையும் மூடுமாறு அதிகாரிகள் கெடுபிடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காரணமாக கடலூரில் நேற்று ஒரே நாளில் 122 பேர்களும், விழுப்புரத்தில் 49 பேர்களும், பெரம்பலூரில் 25 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சியிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் திறந்தால் மிக அதிக பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout