சிறுமிகள் ஆபாச படம் பார்த்த சென்னை முதியவர் கைது!
- IndiaGlitz, [Tuesday,December 24 2019]
குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் மற்றும் டவுன்லோட் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் சிறுமிகளின் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
மேலும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்தவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் சிறுமிகளின் ஆபாச படம் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி இவர் தனது செல்போனில் டவுன்லோடு செய்துள்ளதாகவும் தெரிகிறது
கைது செய்யப்பட்ட முதியவர் பெயர் மோகன் என்றும் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முதியவர் மோகனை அடுத்து இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது