பேஸ்புக் பழக்கம்! 23 வயது பெண்ணை காதலில் வீழ்த்தி திருமணம் செய்த 71 வயது முதியவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த, 23 வயது பெண்ணை, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 71 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லோரி டேன்ஸ், என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபேஸ் புக் மூலம் பழக்கமானவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த தாமஸ் கிரேஸ் என்கிற 71 வயது முதியவர்.
நாளாக நாள் ஆக இவர்களுடைய நட்பும் வலுவாகியது. இதனால் தன்னுடைய முகநூல் தோழியை பார்க்க, தாமஸ் ஒரு முறை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் சுற்றுலா தலங்களுக்கு சென்று நாட்களை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர்.
மேலும் தாமஸ் தன்னுடைய தோழி லோரியிடம் காதலை தெரிவித்துள்ளார். இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் தாமஸின் காதலை ஏற்றுக்கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் லோரி.
பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆரம்பத்தில் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி லோரியின் பெற்றோர், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் லோரி தன்னுடைய காதலில் பிடிவாதமாக இருந்ததால் ஏற்றுக் கொண்டனர். இதனால் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். தற்போது இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
எனினும் வயது வித்தியாசத்தை சுட்டி காட்டி பலர் தன்னையும், கணவரையும், கிண்டல் செய்வது, வேதனையை கொடுத்தாலும் தங்களுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக செல்கிறது என கூறியுள்ளார் லோரி.
மேலும் இதுவரை தாமஸின் வயதை தான் , ஒரு பொருட்டாக கருதியதே இல்லை என்றும், தன்னை மிகவும் கவர்ந்தது அவருடைய நீல நிற கண்கள் என தெரிவித்துள்ளார் . இவர்களுடைய காதலை சிலர் புரிந்து கொண்டு, இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும், சிலர் விமர்சனங்களும் செய்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com
Comments