பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில்: நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபக்கம் கவின் தனது காதல் நாடகத்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் கவின் தாயார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்துள்ளது.
கவின் தாயார் உள்பட 3 பேர் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்தததாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பில் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் தாயார் உள்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்த விபரங்கள் கவினுக்கு தெரிந்திருக்க இன்னும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments