5 மாதமா பள்ளிகள் இயங்கல… 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!
- IndiaGlitz, [Friday,July 31 2020]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலிவியில் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. இதற்கு நடுவில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாலிவியில் கடந்த மார்ச் மதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இத்தகைய ஊரடங்கு நாட்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் அதிகரித்து இருப்பதாகவும் குழந்தைகளுக்கு எதிராக அவிழ்த்துவிடப்படும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும் அந்நாட்டின் சிவில் சொஷைட்டி இயக்குநர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மாலவியில் தற்போது 10-14 வயதுடைய 7 ஆயிரம் பள்ளி மாணவிகள் கர்ப்பம் அடைந்து இருப்பது குறித்து அந்நாட்டின் அரசு மற்றும் குழந்தைகள் நல உரிமையாளர் ஒருவர் வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இந்த மாதத்தில் மட்டும் பலோம்போ என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இளம் பெண்கள் மீதான தாக்குதல் காரணமாக இப்படி நடப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இளம் வயதிலேயே பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர் என மக்கள் மத்தியில் பெரும் கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மாலிவியைப் போலவே கென்யாவிலும் கர்ப்பங்கள் அதிகரிப்பதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கொரோனா காலத்தில் மட்டும் கென்யாவில் 1 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு பிறப்பித்த 3 மாதங்களில் அந்நாட்டின் சிறிய வயதுடைய 1 லட்சத்து 52 ஆயிரம் குழந்தைகள் கர்ப்பம் அடைந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகிலேயே அதிக விகிதத்தில் கர்ப்பம் அடையும் நாடாகவும் கென்யா இருந்து வருகிறது. அந்நாட்டில் உள்ள ஆயிரம் பெண்களில் 82 பேர் கர்ப்பம் அடைகின்றனர். 40 விழுக்காடாக இருக்கும் இந்த எண்ணிக்கை உலகிலேயே மிகவும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.