திருச்சி மாநாட்டில் திமுக அறிவித்த 7 செயல்திட்டம் குறித்து அதிமுக கூறும் அதிரடி விமர்சனம்!
- IndiaGlitz, [Thursday,March 11 2021]
வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழக எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7 செயல்திட்டங்களை திருச்சி மாநாட்டில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடியாத வகையில் பெரிதானதாகவும் அதே நேரத்தில் தவறான புள்ளிவிரவரங்களுடன் இருப்பதாகவும் தற்போது அதிமுக சார்பில் விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக தொலைநோக்கு பார்வை இல்லாத செயல்திட்டங்கள், நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது என்ற விமர்சனத்தை இந்த 7 அம்ச செயல்திட்டத்தைக் குறித்து அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக ஏற்படுத்திய செயல்திட்டத்தையே இவர்கள் மீண்டும் கோர்த்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு என்ற தலைப்பில் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கிற்கு கொண்டு செல்ல ரூ.35 லட்சம் கோடியில் செய்யவிருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறி இருந்தார். இதில் தமிழகம் ஏற்கனவே இரட்டை இலக்கு கொண்ட பொருளாதாரத்தை தக்க வைத்துள்ளது என்பதை மறந்துவிட்டே இப்படி ஒரு அறிவிப்பை எதிர்க்கட்சி கூறியுள்ளதாக அதிமுக சார்பில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் விவசாய நிலத்தை 20 லட்சம் ஹெக்டேராக மாற்ற வேண்டும் என கூறியிருந்தார். இந்த பரப்பளவு கணக்கு முறையில் தவறு இருப்பதாகவும் அதிமுகவினர் விமர்சித்து உள்ளனர். குடிநீர் திட்ட மேம்பாடு என மற்றொரு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. குடிநீர், நீர்த்தேக்கம், குடிமராமத்துப் பணி மற்றும் மறுசுழற்சி போன்றவற்றில் தமிழக அரசு முன்னிலை பெற்று இருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சி அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் என்ற தலைப்பில் ஒரு கணக்கீடு சொல்லப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசு கணக்கீடு எதுவும் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை அறிவிப்பே தெளிவுப்படுத்தி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் என்பது ஏதோ புதிய அறிவிப்பை போல எதிர்க்கட்சி அறிவித்து இருப்பதாக அதிமுகவினர் சாடியுள்ளனர்.
உயர்தர குடிநீர் திட்டம் 36 லட்சம் வீடுகளுக்கு வழங்குவதாக கூறுவது – ஏற்கனவே தமிழக அரசு 80% மக்களுக்கு இலவச குடிநீரை வழங்கி வருகிறது. எனவே இந்த அறிவிப்பிலும் கணக்கெடுப்பு முறையே தவறாக இருப்பதாகவும் விமர்சித்து உள்ளனர். தலைப்பில் மற்றொரு திட்டம்- இதில் ஏற்கனவே தமிழக அரசு கொண்டுவந்த கேபிள் டிவி போன்ற செயல்திட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் எதிர்க்கட்சி அறிவித்து இருக்கும் 7 அம்ச அறிவிப்பு அனைத்தும் தொலைநோக்கு திட்டமாக இல்லை என்றும் நிறைவேற்றவே முடியாத வகையில் அமைந்து இருப்பதாகவும் அதிமுக சார்பில் விமர்சிக்கப்படுகிறது.