திருமண ஆசைக்காட்டி இளைஞரிடம் 7 லட்சம் மோசடி… பரபரப்பான பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூர் அடுத்த மாரத்தஹள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் திருமண ஆசைக்காட்டி பண மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த இளைஞர் திருமணத்திற்காக இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவை பார்த்து செல்போனில் தொடர்பு கொண்ட இளம்பெண் மேய்பெல் எட்வர்ட்டு என்பவர் இளைஞரை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புதல் அளித்து இருக்கிறார். அதை நம்பிய இளைஞர் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.
இந்நிலையில் மேய்பெல் எட்வர்ட்டு வீடு வாங்க இருப்பதாக இளைஞரின் தெரிவித்து இருக்கிறார். அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட இளைஞர், மேய்பெல் எட்வர்ட்டின் வங்கிக் கணக்கிற்கு ரூ.71/2 லட்சம் பணத்தை அனுப்பியிருக்கிறார். பணம் செலுத்தப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பதறிப்போன இளைஞர் போலீசாரிடம் உதவியை நாடியிருக்கிறார்.
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசாரை இந்த வழக்கை தீவிர விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. திருமண ஆசைக்காட்டி இளம்பெண் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout