இந்திய மாணவிக்கு போட்டி போடும் 7 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்!
- IndiaGlitz, [Monday,April 29 2019]
சைமன் நூராலி என்கிற 17 வயது மாணவி, உயர்கல்வி பயில 7 பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த 7 பல்கலை கழகங்களும் வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் ஆகும்.
துபாய் வாழ், இந்திய மாணவி சைமன் நூராலி சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் சுட்டி. ஒன்றாம் வகுப்பில் இதே முதல் இடத்தை மட்டுமே பிடித்து வந்தவர். பெற்றோரும் அவர் விருப்பத்திற்கு ஏற்ப
அவர் விரும்பிய படிப்பை தேர்வு செய்து பக்க வைத்தனர்.
இந்நிலையில் இவர் தற்போது, மேல் படிப்பிற்காக பல முன்னணி பல்கலை கழகங்களில் விண்ணப்பித்திருந்தார். அதிலிருந்து பல மாணவர்கள் படிக்க ஆசைப்படும், உலக அளவில் பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், உள்ளிட்ட 7 பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து சைமன் நூராலி கூறுகையில், இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், தன்னுடைய வெற்றிக்கு காரணம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானே நிர்ணயித்து படித்தேன். என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்த பல்கலைக்கழகத்தில், இன்டர்நேஷனல் ரிலேஷன் அன்ட் எக்னாமிக்ஸ் பிரிவு உள்ளதே அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பை தொடர போவதாக கூறியுள்ளார்.