சென்னையில் ஒருநாள் குழந்தை உள்பட 7 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நாளில் இன்று 7 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பச்சிளங்குழந்தைகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று சென்னையில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் தற்போது பிறந்து ஒரே நாளான குழந்தை உள்பட சென்னையில் 7 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிறந்து ஒரே நாள் ஆன குழந்தை, 2 மாத குழந்தை, ஒன்றரை வயது குழந்தை, 3 வயது பெண் குழந்தைகள் இருவர், 3 மற்றும் 5 வயது ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு வந்தால் பெரியவர்களுக்கே மிகுந்த சிரமம் ஏற்படும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாத குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.