தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு மாணவன் செய்த விபரீதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே தாய் செல்போன் தராததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 13 வயதே ஆன நிலையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் சமூக ஆர்வலர்களும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக செல்போன் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் விளையாட்டுகளினால் மனம் உடைந்த சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதை அடுத்து பல மாநிலங்களில் ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விளாத்திக்குளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி எனும் கிராமத்தில் வசித்துவரும் கூலித் தொழிலாளி சீனிமுருகன். இவர் வேலைக்கு சென்ற நிலையில் அருவடைய மனைவி ஜோதிமணி ஒரு திருமணத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜோதிமணி திருமணத்திற்கு செல்லும்போது தற்போது உயிரிழந்த பாலகுரு (13) விளையாடுவதற்கு செல்போனை கேட்டு இருக்கிறார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு திருமணத்திற்கு சென்று இருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய ஜோதிமணிக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. காரணம் வீட்டில் தனியாக இருந்த பாலகுரு, தன்னுடைய தாய் செல்போன் கொடுக்காமல் சென்று விட்டதால் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com