சிறந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு.. தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் தமிழ் படங்களுக்கு சில விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது.

இந்த நிலையில் சிறந்த படத்திற்கான தேசிய விருது மாதவன் நடித்த ’ராக்கெட்டேரி’ என்ற படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த பாப்புலர் திரைப்படம் என்ற விருது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது ’புஷ்பா’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த பின்னணி பாடகி என்ற விருது ’இரவின் நிழல்’ திரைப்படத்தில் மாயவா சாயவா என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

மேலும் தமிழில் சிறந்த படம் என்ற விருது ’கடைசி விவசாயி’ என்ற படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’சார்பாட்டா பரம்பரை’ ’ஜெய்பீம்’ ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்களுக்கு இதுவரை விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இனிமேல் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் ‘ராக்கெட்டரி’ , ‘கடைசி விவசாயி’ படங்களுக்கு விருது கிடைத்துள்ளதால் தமிழ் திரையுலகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

More News

லைகாவின் அடுத்த படம்.. பூஜை விழாவுக்கு வந்த முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், இந்த பூஜையில்  முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள்

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'பீஸ்ட்' நடிகை?  இன்னும் யார் யாரெல்லாம் நடிக்குறாங்க?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன

சந்திரனில் வெற்றி, சதுரங்கத்தில் தோல்வி.. உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் தொடங்கியது என்பதும் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன்

கவர்னர் கையால் டாக்டர் பட்டம் பெற்ற இளம் இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரை உலகின் இளம் இசையமைப்பாளர் இன்று, கவர்னர் ஆர்.என் ரவி கையால் டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பெசன்ட் நகர் பீச்சில் சண்டை போட்ட இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களா? டிஆர்பி எகிறும் என தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.