close
Choose your channels

69வது பிலிம்பேர் விருதுகள்: தலா 5 விருதுகளை அள்ளிய மூன்று திரைப்படங்கள்..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

69 ஆவது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் தலா 5 விருதுகளை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

2024 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகிய ஐந்து பிரிவுகளில் ’12த் பெயில்’ என்ற திரைப்படம் வென்றுள்ளது.

அதேபோல் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படமும் 5 விருதுகளை வென்று உள்ளது. இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடகர், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த சவுண்ட் டிசைன் ஆகிய விருதுகளை வென்றுள்ளது.

அதேபோல் விக்கி கெளசல் நடித்த ‘சாம் பஹ்தூர்’ திரைப்படமும் ஐந்து பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது

மேலும் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சிறந்த ஸ்டண்ட் பயிற்சியாளர் மற்றும் சிறந்த VFX விருதுகளை பெற்றுள்ளது. ஸ்டண்ட் பயிற்சியாளர் பிரிவில் விருதுகளை வென்றவர்களில் ஒருவர் அனல் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் சிறந்த பின்னணி பாடகி விருதை பெற்றுள்ளது. இந்த படத்தில் பாடல் பாடிய ஷில்பா ராவ் என்பவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment