தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது

சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 220,716 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95,857 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,571 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,723 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,249 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 61,342 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 23,24,080 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் என்ற புகழைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்பவர் தல அஜித் அவர்களின் படத்திற்கு அறிமுக பாடலை எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார் 

இந்தியாவின் கனவு நாயகன்… நினைவு தினம் இன்று!!!

இந்தியாவின் வல்லரசு கனவை இளைஞர்கள் மத்தியில் விதைத்த எழுச்சி நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

ஏழைச் சிறுவனின் கல்விக்கு கைக்கொடுக்கும் இளம் காவல் அதிகாரி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் உள்ள பலாசியா காவல் நிலையத்தில் பணியாற்றும் இளம் காவல் அதிகாரி வினோத் தீக்ஷித்

அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

டிக்டாக் தடையோடு கணக்கு முடியல… பப்ஜி உள்ளிட்ட பெரிய லிஸ்டே இருக்கு… பரபரப்பு தகவல்!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை