ஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் 7000ஆக இருந்து வரும் நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு 7000க்கு அருகில் உள்ளது. ஆறாம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,438 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்றுமட்டும் 5,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3659 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4707 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 59,584 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அடிச்சு பழுக்க விடாதேம்மா: ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

சன்டிவியில் 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனா, அதன்பின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகள் சவுந்தர்யா குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் சென்றார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

கொரோனா லாக்டௌனில் மதுமிதா செய்த காரியம் 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் காமெடி நடிகை மதுமிதா. 'ஒருகல் ஒருகண்ணாடி'

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் படிச்சதே மோசடி செய்துதாங்க… அதிபர் மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப்