69 வயசில் கதை கேட்டு நடிக்கும் ஜனகராஜ்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

நாயகன் படத்தில் வரும் நிலா அது வானத்து மேலே பாடலில் வரும் பலானது ஓடத்து மேலே என்ற வரி யாருக்கும் பிடிக்கவில்லை, ஆனால் அதை எழுதியவர் இளையராஜா பலானது என்று சென்னையில் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று அதை எழுதினாராம். இந்த பாடலை கொச்சினில் உள்ள கடலில் பேக் வாட்டரில் படம் பிடிக்கலாம் என்று முடிவு செய்த போது இயக்குனர் கடலுக்கு இன்னும் மூணு கிலோ மீட்டர் போகலாம் வேற எந்த படகுகள் டிஸ்டர்பன்ஸ் இருக்காது, என்று அழைத்துச் சென்றாராம் இதில் நிறைய பேரு வாந்தி எடுத்து விட்டார்களாம். இருந்தாலும் அந்த பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

கவுண்டமணி செந்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது நான் மட்டும் சோலோ காமெடியனாக நடிக்கவில்லை அவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். சில படங்களில் கவுண்டமணியுடனும் சில படங்களில் செந்தில் உடன் நடித்திருக்கிறேன் அவர்களுக்கு நகைச்சுவை பகுதி எழுதியவர் ஏ வீரப்பன் அவர் பெரும்பாலும் லாரல் ஹார்டி படத்தை பார்த்து இந்த மாலை கண் நோய் கண்ணு தெரியாத காமெடி இந்த மாதிரி காமெடிகளை எழுதினார். அண்ணாமலை படத்தில் நாசமா நீ போனியா என்ற வசனத்தை நான் எங்கும் சென்று தேடவில்லை, சென்னையில் உள்ள ட்ரிப்ளிகேன் ஏரியாவுக்கு சென்றால் அங்கு தமிழ் உறுதுகலந்து பேசுவதை கேட்கும் போது சிரித்து சிரித்து செத்தே போயிருவோம்.

அந்த அளவு நகைச்சுவையாக பேசுவார்கள் அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் மயிலாப்பூரில் பிராமணபாஷைகள் பேசுவார்கள் பெரம்பூரில் ஆங்கிலோ இண்டியன் பாஷை பேசுவார்கள் அதிலிருந்து தான் நான் அந்த படத்தில் பேசுனேன் அண்ணாமலை படத்தின் கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் அவர் எந்த டிஸ்டர்பன்ஸ் செய்யாமல் சூட்டிங் பிரேக்கில் சிகரெட் பிடித்துக் கொண்டு அமைதியாகி விடுவார். ஸ்பாட்டில்நாமலே பத்து சிகரெட் தான் பிடிப்போம் ஆனால் அவர் மளமளவென 25 சிகரெட் பிடிச்சுருவாரு நானே பயந்துட்டேன் பாட்ஷா படத்தின் கதையை சுரேஷ்கிருஷ்ணா என்னிடம் கூறும்போது பிடித்திருந்தது. அதனால் நடித்தேன் நான் இதுவரை எந்த படத்திலன் கதையைக் கேட்டும் நடித்ததில்லை இப்போ எனக்கு 69 வயசு ஆச்சு இனிமேதான் கதையை கேட்டு நடிக்க போறேன் நான் ஒரு மூன்று கதையை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அந்த கதையில் நடிக்க இருக்கிறேன் அதன் பிறகு தான் இன்டர்வியூ போன்ற நிகழ்வுதர இருக்கிறேன் இதுதான் என்னுடைய கடைசி இன்டர்வியூ என்றார் ஜனகராஜ்.