தமிழகத்தில் கொரோனா வைரஸ்: நேற்றைவிட இன்று அதிகமானதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் மேலும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்ற 64 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து 19 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் இன்றைய தினம் வரை வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431 என்றும் கொரோனா வார்டில் 253 பேர் இருப்பதாகவும், இவரக்ளில் 28 நாட்கள் நிறைவடைந்தவர்கள் 27,416 என்றும் இதுவரை தமிழகத்தில் 5305 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

தமிழக அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகை த்ரிஷா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக தினமும் 50க்கும் மேல் உயர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க சீனா எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???

கொரோனா ஊரடங்கினால் சீனா அதிகாரிகள் பலரை நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாத நிலைமை இருந்துவந்தது

கொரோனா தடுப்பு நிதி: அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித சினிமா படப்பிடிப்பும் நடைபெறவில்லை

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஊரடங்கு உத்தரவு முடிய ஏழு நாட்களே உள்ளது

முதல் முறையாக நேற்று சீனாவில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை!!!

கொரோனா நோய்த்தொற்று கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலக சுகாதார மையத்தால் உறுதிசெய்யப்பட்டது.