கடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த ஜான் மைக்கேல் என்ற 67 வயது நபர் தான் தீவிர அஜித் ரசிகர் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பூவரசன் பீப்பி, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜான் மைக்கேல் அஜித் குறித்து கூறிய தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் அவருடைய அனைத்து படங்களையும் தான் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் அவருடைய எல்லா படங்களும் தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அஜித் தானாகவே கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தவர் என்றும், அதனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு பேட்டியில் ’மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறீர்கள், உங்களுக்கு என்று தனிப்பட்ட ஆசை எதுவும் கிடையாதா? என்ற கேள்விக்கு அஜித், ‘நாம் பூமிக்கு வரும்போது எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை, செல்லும் போதும் எதையும் எடுத்துக் கொண்டு செல்வதில்லை. எனவே இடைப்பட்ட காலத்தில் நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம்’ என்று கூறியது என்னை ஆச்சரியப்படுத்தியது என்றும் அன்று முதல் அவருடைய ரசிகன் ஆனதாகவும் கூறியுள்ளார். மேலும் கடவுள் நேரடியாக வந்து யாருக்கும் உதவி செய்வதில்லை என்றும் அஜீத், ராகவா லாரன்ஸ் போன்ற நபர்களின் மூலம்தான் அவர் உதவி செய்கிறார் என்றும் அஜித்தை கடவுளின் தூதராக தான் பார்ப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்
அஜித்துக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் 67 வயதில் ஒருவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
I met this gentleman today near Starbucks, Nandanam. He is John Michael, an ardent fan of Thala Ajith Kumar. He wanted me to record him while we were having a casual conversation and added that he is already quite popular on YouTube. His love for Thala, the language English... pic.twitter.com/CMeHfwvzpD
— Halitha (@halithashameem) August 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com