இன்று மட்டும் 66 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சென்னைக்கு அதிக பாதிப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 பேர்கள் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 66 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 43 என்றும், இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி இன்று மட்டும் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 94 பேர்கள் இதனையடுத்து கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 960 என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7,707 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 80,110 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

More News

சமூக விலகல் ஒரே நாளில் கேள்விக்குறியாகிவிட்டது: பிரபல இயக்குனர் வருத்தம்

சென்னை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததும், இன்று காலை முதல் பொதுமக்கள் சமூக விலகலை கேள்விக்குறியாக்கி கடைகளில் குவிந்தனர்.

ஜோதிகா படத்தை அடுத்து ஆன்லைன் வெளியாகிறதா ராகவா லாரன்ஸ் படம்?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது

கொரோனா நிதிக்காக கிரிக்கெட் போட்டி: யோசனை கூறிய அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோவை தடுக்க நிதி திரட்ட வேண்டும் என்றும், அதற்கு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் யோசனை கூறியுள்ளார்.

பிரபல குணசித்திர நடிகரின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் ரவி வல்லத்தோல் அவர்களின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார் 

ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் நடிகையின் ஆவேச டுவீட்

சமீபத்தில் ஜோதிகா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டபோது 'கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறார்கள். கோயில்களை பராமரிக்கிறீர்கள்.