14 மாதங்களில் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்த 65 வயது பெண்!!! தலையைச்சுற்ற வைக்கும் அரசு ஆவணம்!!!
- IndiaGlitz, [Monday,August 24 2020]
பீகார் மாநிலத்தின் அரசு ஆவணங்களில் 65 வயது பெண்மணி ஒருவர் 14 மாதங்களில் 8 குழந்தைகளை பெற்றெடுத்தாகத் தகவல் சேகரிக்கப் பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பெண்மணி 9 மாதத்தில் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் இருக்கிறது. இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த ஆவணங்களைக் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் பீகார் மாநில முதல்வர் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார்.
பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு மத்திய அரசின் தேசிய சுகாதாரத்துறை திட்டத்துடன் இணைந்து பீகார் மாநில அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. ஜனனி ஆயிஷா யோஜ்னா என அழைக்கப்படும் இத்திட்டத்தின்கீழ் தற்போது அம்மாநிலத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக உதவித்தொகையை செலுத்தும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் பயனாளர்களாக 65 வயது பெண்மணி ஒருவர் 14 மாதங்களில் 8 குழந்தைகளை பெற்றெடுத்ததாக தகவல் சேகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில் இப்பெண்மணிக்கு 20 வயதில் ஒரு மகன் மட்டுமே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனியா தேவி என்னும் மற்றொரு பெண்ணுக்கு குழந்தைகளே இல்லாத நிலையில் 9 மாதத்தில் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தாக தவறான தகவல்கள் சேகரிக்கப் பட்டுள்ளது. இதனால் அரசு ஆவணங்களில் குறிப்பிடப் பட்டு இருக்கிற தவறான தகவல்கள் எந்த நோக்கத்தில் சேகரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் என்னென்ன என்பதைக் குறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.