64வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது பெற்ற நட்சத்திரங்கள். முழு விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருதை அடுத்து திரை நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் ஒரு விருது என்றால் அது பிலிம்பேர் விருதுதான். 64வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நான்கு மொழிகளிலும் விருதுகள் பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னிஷியன்கள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்.
சிறந்த நடிகர்:
தமிழ் – மாதவன் (இறுதிச் சுற்று), சூர்யா (24).
மலையாளம் – நிவின் பாலி (ஆக்ஷன் ஹீரோ பிஜூ)
கன்னடம் – அனந்த்நாக் (கோதி பன்னா சாதாரண மைகட்டு)
தெலுங்கு – ஜூனியர் என்.டி.ஆர். (அஆ)
சிறந்த நடிகை:
தமிழ் – ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
மலையாளம் – நயன் தாரா (புதிய நியாயம்)
கன்னடம் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் (யு டேர்ன்)
தெலுங்கு – சமந்தா (அஆ)
சிறந்த அறிமுக நடிகர்: தமிழ்
சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த அறிமுக நடிகை: தமிழ்
மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த இயக்குனர்:
தமிழ் – சுதா கே பிரசாத் (இறுதிச் சுற்று)
மலையாளம் - திலீஸ் போதன் (மகஷ்ண்டே பிரதிகாரம்)
கன்னடம் – ரிசாப் ஷெட்டி (கிரிக் பார்ட்டி)
தெலுங்கு - வம்சி பைடிபல்லி – (ஊப்பிரி)
சிறந்த திரைப்படம்:
தமிழ் – ஜோக்கர்
மலையாளம் – மகஷிண்டே பிரதிகாரம்
கன்னடம் - திதி
தெலுங்கு – பெல்லி சூப்புலு
சிறந்த துணை நடிகர்:
தமிழ் – சமுத்திரக்கனி (விசாரணை)
மலையாளம் – விநாயகன் (கம்மட்டி பாடம்)
கன்னடம் – வசிஸ்தா சிம்ஹா (கோதி பன்னா சாதாரண மைகட்டு)
தெலுங்கு – ஜெகபதி பாபு (நன்னக்கு பிரேமதோ)
சிறந்த துணை நடிகை:
தமிழ் – தன்ஷிகா (கபாலி)
மலையாளம் – ஆஷா சரத் (அனுராக காரிக்கின் வெல்லம்)
கன்னடம் – சம்யுக்தா ஹெக்டே (கிரிக் பார்ட்டி)
தெலுங்கு – நந்திதா ஸ்வேதா (எக்கடகிபோவது சின்னவடா)
சிறந்த இசை ஆல்பம்:
தமிழ் – ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
மலையாளம் – பிஜிபால் (மகஷிண்டே பிரதிகாரம்)
கன்னடம் – அஜனீஸ் லோகநாத் (கிரிக் பார்ட்டி)
தெலுங்கு – தேவி ஸ்ரீ பிரசாத் (நன்னக்கு பிரேமதோ)
சிறந்த பின்னணிப் பாடகர்:
தமிழ் – சுந்தர் ஐயர் (ஜோக்கர்- ஜாஸ்மினு பாடல்)
மலையாளம் – எம்.ஜி.ஸ்ரீகுமார் (ஒப்பம் – சின்னம்மா பாடல்)
கன்னடம் – விஜய் பிரகாஷ் (கிரிக் பார்ட்டி –பெலகெட்டுபாடல்)
தெலுங்கு – கார்த்திக் (யெல்லிபோகே ஷியாமலா – அஆ)
சிறந்த பின்னணிப் பாடகி:
தமிழ் – ஸ்வேதா மேனன் (கபாலி – மாயநதி பாடல்)
மலையாளம் – சின்மயி (ஆக்ஷன் ஹீரோ பிஜூ – ஊஞ்சலி ஆடி பாடல்)
கன்னடம் – அனன்யா பட் (ராமா ராமா – நம்ம ஹயோ தேவரே பாடல்)
தெலுங்கு – சித்ரா (நேனு சைலஜா – ஈ பிரேமகி பாடல்)
சிறந்த ஒளிப்பதிவு:
தமிழ் – திரு (24)
மலையாளம் - பி.எஸ்.வினோத் (ஊப்பிரி)
சிறந்த பாடலாசிரியர்:
தமிழ் – தாமரை (அச்சம் என்பது மடமையடா - தள்ளிப் போகாதே பாடல்)
மலையாளம் – மது வாசுதேவன் (ஒப்பம் – சின்னம்மா பாடல்)
கன்னடம் – ஜெயந்த் கைகினி (சரியாஹி நினைபிடே – முங்கரு பாடல்)
தெலுங்கு – ராமஜோகய்யா சாஸ்திரி (ஜனதா கரேஜ் - பிரனாமம்)
வாழ்நாள் சாதனையாளர் விருது:
டாக்டர்.விஜயா நிர்மலா
சிறந்த விமர்சகர் விருது:
தமிழ் – சூர்யா (24), த்ரிஷா (கொடி)
மலையாளம் – துல்கர் சல்மான் (களி மற்றும் கம்மட்டி பாடம்)
தெலுங்கு (ஆண்) – அல்லு அர்ஜூன் (சர்ரைனோடு)
தெலுங்கு (பெண்) - ரித்து வர்மா (பெல்லி சூப்புலு)
கன்னடம் (ஆண்) – ரக்ஷித் ஷெட்டி (கிரிக் பார்ட்டி)
கன்னடம் (பெண்) – ஸ்ருதி ஹரிஹரன் (கோதி பன்னா சாதாரண மைகட்டு)
விருது பெற்ற அனைத்து நட்சத்திரங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout