close
Choose your channels

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதால் நிம்மதி!

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 6000க்கும் அதிகமாக இருந்தாலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட பாதிப்பு எண்ணிக்கையை ஒட்டி வருவதால் தமிழக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்று பாதிப்பு எண்ணிக்கைக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கைக்கும் சுமார் 500 மட்டுமே வித்தியாசம் உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,575 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 82 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3741 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5927 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,72,883 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 58,818 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 24,42,482 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment