63வது தேசிய விருதுகள்: முழு பட்டியல்

  • IndiaGlitz, [Monday,March 28 2016]

63வது தேசிய விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல் தமிழ் திரையுலகம் இந்த முறையும் பல முக்கிய விருதுகளை வென்றுள்ளது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் சிறந்த திரைப்படம் விருதை வென்று பெருமை சேர்த்துள்ளது. அதேபோல் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படத்திற்கு தமிழின் சிறந்த படம், சிறந்த எடிட்டர் மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய மூன்று விருதுகளும், இசைஞானி இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை' படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதும் கிடைத்துள்ளது. மேலும் 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகாசிங் அவர்களுக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.

63வது தேசிய விருது பெற்றவர்களின் முழுவிபரங்கள் பின்வருமாறு:
சிறந்த திரைப்படம்: பாகுபலி
சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ்மஸ்தானி)
சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு)
சிறந்த நடிகை: கங்கணா ரணாவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த திரைப்படம் (இந்தி) - Dum Laga Ke Haisha
சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது: நீரஜ் கேவான் (Masaan)
சிறந்த துணை நடிகர் : சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: பஜ்ரங்கி பாய்ஜான்
சிறந்த எடிட்டர் : கிஷோர் T.E (விசாரணை)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (தாரைதப்பட்டை)
சிறந்த நடன இயக்குநர்: ரெமோ டிசௌசா (தீவானி மஸ்தானி பாடல் - பாஜிராவ் மஸ்தானி )
தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது பெறும் படம்: Nanak Shah Fakir
சிறந்த மலையாளப்படம் : பத்தேமாரி
சமூகப் பிரச்சினையைப் பேசும் சிறந்த படம்: நிர்ணயகம் Niranayakam
சுற்றுச்சூழலுக்கான சிறந்த படம் : வலிய சிறகுள்ள பக்‌ஷிகள்
சிறந்த சிறுவர் படம் : துரந்தோ
மொழி வாரியாக சிறந்த படங்கள்:
தமிழ் : விசாரணை
தெலுங்கு: காஞ்சே
சமஸ்கிருதம்: ப்ரியமானஸம்
கன்னடம்: திதி
பஞ்சாபி : Chauthi Koot
கொங்கணி : எனிமி
அஸ்ஸாமி: Kothanodi
ஹர்யான்வி : Satrangi
காஸி : Onaatah
மணிப்பூரி : Eibusu Yaohanbiyu
மிசோ: Kima's Lode Beyond the Class
ஒடியா: Pahada Ra Luha
சினிமா எடுப்பதற்கு உகந்த மாநிலம் விருது - குஜராத்
சினிமா எடுப்பதற்கு உகந்த மாநிலம் சிறப்பு விருது - உத்திரபிரதேசம், கேரளா
சிறப்பு விருது: ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழ்த்திரையுலகம் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், விருது பெற்ற தமிழ்த்திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்