மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு: இன்று எத்தனை பேர்?
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
தமிழகத்தில் நேற்று 477 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 939 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியதுமான செய்திகள் வெளிவந்ததால் தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11224ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 482 என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6750 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவில் இருந்து 634 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 4172 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று 12,445 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 311,621 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.