கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்
- IndiaGlitz, [Monday,January 27 2020]
கேரளாவில் இடது சாரி கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள CAA – க்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள இடதுசாரி கூட்டணி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியுள்ளது.
கேரளாவின் வடக்கு எல்லையில் உள்ள காசர் கோட்டில் இருந்து தெற்கு எல்லையில் உள்ள களியக்காவிளை வரை சுமர் 620 கிலோ மீட்டர் தொலைவிற்கு பொது மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப் பார்க்கப் பட்ட நிலையில் சுமார் 70 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தைத் தொடர்ந்து கேரள அரசு இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.